fbpx

ஐந்தாயிரம் பேருடன் வானில் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்! வாயை பிளக்க வைக்கும் வசதிகள்

ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. வித்தியாசமான தனித்துவமான முயற்சிகளை ஆதரிக்கப் பொதுமக்கள் என்றுமே தவறியது இல்லை. அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் இப்போது நடந்துள்ளது.

உலகில் பல ஆடம்பரமான ஹோட்டல்கள் பல உள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள ‘Escher Cliff’ என்ற ஆடம்பர ஹோட்டல் மலைகளின் மடியில் கட்டப்பட்டது. மாலத்தீவின் ரங்காலி தீவில் அமைந்துள்ள ‘Conrad Hotel’ கடலின் நடுவில் கட்டப்பட்டுள்ளது. பிரான்சின் ‘Ettrapreves’ இல் தங்கினால், சுற்றிலும் பனிப்பொழிவை அனுபவிக்கலாம். அதேபோல் இத்தாலி மலையில் குகைக்குள் கட்டப்பட்டுள்ள ‘Grotta Hotel’ உங்களை சிலிர்க்க வைக்கும். ஆனால், வானத்தில் ஒரு ஹோட்டலை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இதில் ஜிம் முதல் நீச்சல் குளம் போன்ற அரச வசதிகள் உள்ளன. ஹோட்டல் போல் கட்டப்பட்ட ஸ்கை க்ரூஸ் பற்றி இன்று சொல்லப் போகிறோம்.

ஏமன் நாட்டைச் சேர்ந்த Hashem Al-Ghaili  என்பவர் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இது ஹசீம்-அல்-காய்லி இந்த பறக்கும் ஹோட்டலை ஒன்றைப் பார்த்து பிரமித்து அதிலிருந்து மாற்றி வடிவமைத்துள்ளார். அதாவது வான் மேகங்களுக்கு நடுவில் ஒரு வாரம் தங்கியிருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் உணவு உள்ளிட்ட பூமியில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வானில் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படிதான் இருக்கிறது ஹசீமின் விடீயோ காட்சிகள். 

உள்ளே இருந்து பார்த்தால் 5 ஸ்டார் ஹோட்டல் போல இது தோற்றமளிக்கும். இந்த பறக்கும் ஹோட்டல் ஆடம்பரத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. உள்ளே இருந்து பார்த்தால் 5 ஸ்டார் ஹோட்டல் போல தோன்றும். இதில், வணிக வளாகம், பார், உணவகம், விளையாட்டு வளாகம், சினிமா அரங்கம் ஆகியவற்றுடன், குழந்தைகள் விளையாடும் மைதானமும் கட்டப்பட்டுள்ளது. அதன் உள்ளே ஒரு மாநாட்டு மையமும் இருக்கும். அங்கு எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யலாம்.

இந்தப் பறக்கும் கப்பலில் 5000 பேர் ரொம்ப நாட்களுக்கு அங்கேயே தங்கியிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விமான வடிவில் இருந்தாலும், அதற்குள் தனித்தனி அறைகள் இருக்கும். ஹோட்டல் எப்படி இருக்குமோ அதேபோலவே, ஒரு பெரிய லாங் அமைப்படும்; அதில் நின்று கொண்டு வானத்தை ரசிக்கலாம். மேலும், இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு, எலக்ட்ரிக் ஜெட் சேவையும் வழங்கப்படும். எலக்ட்ரிக் ஜெட் மூலம் உலகின் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிட்டு திரும்ப இந்த ஹோட்டலுக்கு வரலாம்.

எளிமையாக புரிந்து கொண்டால், அதில் விமானம் போல் எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமே இருக்காது. அணு எரிபொருளாக இருப்பதால், அது எப்போதும் காற்றில் பறந்து கொண்டே இருக்கும். அதன் பராமரிப்பு மற்றும் பழுது வானிலேயே செய்யப்படும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பறக்கும் ஹோட்டலை இயக்கும் விமானி (பைலட்) கிடையாது. இதற்கு Artificial Intelligence மூலம் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

Read more ; மறந்து கூட நைட் டைம்ல இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க! சாப்பிட்டா பிரச்சனை தான்..

Next Post

வெறும் ரூ.300 மட்டுமே செலவு..!! அசத்தலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu May 30 , 2024
An electric scooter charges per day for Rs. At the rate of Rs 10, it costs Rs 300 per month.

You May Like