fbpx

‘வெள்ளை சர்க்கரை’ ஷாக் தரும் 5 விஷயங்கள்!! சாப்பிடலாமா? கூடாதா?

வெள்ளை சர்க்கரையினால் பலவித பாதிப்புகள் உடலுக்கு வர கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாம் சாப்பிட கூடிய அதிகப்படியான உணவு வகைகளில் சர்க்கரை என்பது பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளை சர்க்கரை என்பது இவற்றில் பெரிதும் பயன்படுத்த கூடிய ஒன்றாகும். இந்த வெள்ளை சர்க்கரையினால் பலவித பாதிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெள்ளை சர்க்கரை முதன்முதலில் 12 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் இது ஒரு ஆடம்பரமான ஒன்றாக இருந்தது. அப்போது மக்கள் இதை மசாலாப் பொருளாகப் பயன்படுத்தினர். இது இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் பிற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து பல்வேறு காரமான உணவு வகைகளைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. விலங்கு எலும்பு கரியிலிருந்து வெள்ளை சர்க்கரை பளபளப்பான வெள்ளை நிறத்தைப் பெறுகிறது. நம் வீடுகளில் நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பொதுவாக வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்க விலங்குகளின் எலும்பு கரியுடன் தயாரிக்கப்படுகிறது. ஆனால், அனைத்து பிராண்டுகளும் எலும்பு கரியைப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையில் இவற்றின் அளவு காணப்படுகிறது. எனவே இது ஒரு வெஜிடேரியன் உணவு பொருளாக இருப்பதில்லை.

பழங்காலத்தில் வெள்ளைச் சர்க்கரை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. கண் நோய்கள், காய்ச்சல் மற்றும் இருமல் வரையிலான நோய்களைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்பட்டது. எனவே சர்க்கரையில் மருத்துவ குணங்கள் இருந்ததாக நம்பி பயன்படுத்தி வந்தனர். மேலும் அன்றைய கால கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் இது ஒரு முக்கிய மருந்தாக பிரபலமாகி இருந்தது. கரும்பு அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கைக் கொண்டு வெள்ளைச் சர்க்கரை தயாரிக்கப்படுகிறு. ஏனெனில் இதில் 99.9 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது. நீங்கள் எந்த உணவையும் சாப்பிடாமல், வெள்ளை சர்க்கரை மட்டும் சாப்பிட்டால் உங்கள் உடலை இது செயல்பட வைக்கும். எனவே, இது உணவற்ற உணவு என்று கருதப்படுகிறது. மேலும் வெள்ளை சர்க்கரையில் பிரக்டோஸ் அதிக அளவில் உள்ளது. இது உடலில் கொழுப்பை உருவாக்க வழி செய்கிறது. நாம் அதிக அளவு வெள்ளை சர்க்கரையை எடுத்து கொண்டால், அது நமது கல்லீரலில் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி விடும். எனவே இது கல்லீரலை நேரடியாக சேதப்படுத்த கூடிய முக்கிய ஒன்றாக உள்ளது. ஆல்கஹாலால் ஏற்பட கூடிய விளைவுகளை போன்றே வெள்ளை சர்க்கரை எடுத்து கொள்வதாலும் கல்லீரலுக்கு பல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Read More:சிறையில் இருந்து ஸ்கெட்ச்..!! மாணவர்களுக்கு போதை மருந்து சப்ளை..!! அதிரவைக்கும் கோவை சம்பவம்..!!

Rupa

Next Post

பெண்களின் மார்பகங்கள் வெவ்வேறு அளவில் இருப்பது ஏன்? காரணமும் விளக்கமும்!!

Sat Jun 8 , 2024
ஒரு பெண்ணுக்கு மார்பகம் வளரத்தொடங்கும் காலம் முதல், பூப்படைதல், கர்ப்பகாலம் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மார்பகத்தின் அளவு வேறுபட்டுக்கொண்டே இருக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய சந்தேகம் என்னவென்றால், மார்பங்கள் ஒரே அளவில் இல்லையே என்பதுதான். இரண்டு மார்பகங்களும் ஏன் ஒரே அளவில் இருப்பதில்லை என்ற சந்தேகம் எழும். அது எதனால் என்பதை விரிவாக பார்க்கலாம். ஒரு பெண்ணின் இரண்டு மார்பகங்களுமே ஒரே அளவில், ஒரே வடிவத்தில் இருக்காது. […]

You May Like