தொழிற்கல்வி ஆசிரியர்களின் 50% பகுதிநேரப் பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கில் கொண்டு, ஆணையிடப்பட்டுள்ளது.
01.04.2003-க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அவர்களது பகுதிநேரப் பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தங்கள் மாவட்டத்தில் எத்தனை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது என்ற விவரத்தினை பூர்த்தி செய்து vocationaltn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் அதன் நகல் ஒன்றினை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பத்துடன் இவ்வியக்ககம் அனுப்பிவைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.