18 வயது சிறுமி ஒருவர், மகாராஷ் டிரா மாநிலம், தானே பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரனை சந்திப்பதற்காக, 53 வயதான ஜிதேந்திர திவாரி என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, சிறுமிக்கும் ஜிதேந்திர திவாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, நான் உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி, ஜிதேந்திர திவாரி சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர்க இருவரும் உல்லாசமாக இருக்கும் சம்பவம் குறித்து ஒரு கட்டத்தில் ஜிதேந்திர திவாரியின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அவர், “எனது கணவருக்கு உன்னை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைக்கிறேன்” என்று அந்த சிறுமிக்கு உறுதியளித்துள்ளார்.
மேலும், சிறுமி தங்களுடன் தங்கி நேரம் செலவிட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்க்கு அந்த சிறுமி மறுத்துள்ளார். இதனால் ஜிதேந்திர திவாரியின் மனைவி, சிறுமியை வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, கடந்த 2014ஆம் ஆண்டு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஜிதேந்திர திவாரி மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜிதேந்திர திவாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, இருவருக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், தலா ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது..
Read more: ஆப்பிரிக்காவில் பரவும் டிசீஸ் எக்ஸ்.. கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தானதாம்..!! – எச்சரிக்கும் WHO