தெற்கு சைபீரியாவில் உள்ள ரஷ்யாவின் அல்தாய் குடியரசில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரஷ்ய நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 8:48 மணிக்கு (0148 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான இன்டர்ஃபாக்ஸ், ரஷ்ய அறிவியல் அகாடமியின் ஒருங்கிணைந்த புவி இயற்பியல் சேவையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, சைபீரியாவைத் தவிர, அண்டை பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் உயர் எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்தியத் தலைவர் ஆண்ட்ரி துர்ச்சக் தெரிவித்தார். இருப்பினும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு, சேதங்களை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Read more : அடிக்கடி கெட்ட எண்ணங்கள் வந்துகிட்டே இருக்கா..? அப்ப கட்டாயம் இதை ஃபாலோ பண்ணுங்க..!