கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியின் சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தங்கி சாமி தரிசனம் செய்வது வழக்கம். சபரிமலைக்கு யாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் இரவு அந்த கோயிலின் அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் இறங்கினா். மேலும் இதுபற்றி தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். உடனே அங்கு வந்த தீயணைப்பு குழுவினர், வீட்டின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் சிகிச்சை பலனின்றி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனா்.
மேலும் மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனா். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் சார்பில் கூறுகையில், சிலிண்டர் வெடித்து காயம் ஏற்பட்டவர்கள் உடல் நிலை மோசமாகி வருவதாக கூறப்பட்டது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விபத்தில் சிக்கிய 12 வயது சிறுவன் உடல் நிலை முன்னேற்றம் கண்டு வருவதால், அந்த சிறுவன் தனி அறையில் வைக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்படுகிறான். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வந்த போலீசார் விசாரணை நடத்தினா். விசாரணையில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தங்கி இருந்த வீட்டில் சமையல் சிலிண்டர் தவறுதலாக வெடித்து சிதறியது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Read more ; வகுப்பறையில் வைத்து ஆபாச படம் பார்த்த ஆசிரியர்.. நேரில் பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..