உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இங்குள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கார் மீது லாரி மோதியதில், ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கார் மோதியதைத் தொடர்ந்து, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, ரோட்டில் நின்று கொண்டு இருந்தத ஒரு பெண் மற்றும் அவரது மகள் மீது மோதி அவர்களும் உயிரிழந்தனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் சங்கர் மீனா கூறினார், இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் நிகழ்ந்தது. உயிரிழந்தவர்களுக்கு மாநில முதல்வர் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.