சிவகங்கை மாவட்டத்தில் ஆறு வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 47 வயது நபருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது போக்சோ நீதிமன்றம். இது தொடர்பான பரபரப்பு தீர்ப்பு நேற்று வெளியானது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான ஜஹாங்கீர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவனை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் இளையான்குடி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜாஹாங்கீர் மீது போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை நீதிபதி சிவராஜ் விசாரித்து வந்தார் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஜஹாங்கீர் மீது நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணமானது. இதனைத் தொடர்ந்து சிறுவனை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 வருட தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததால் 20 வருடம் சிறை தண்டனையும் வழங்கினார்
மேலும் இந்த 30 வருடங்களையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி சிவராஜ். மேலும் அபராதமாக எட்டாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் இதனை செலுத்த தவறினால் கூடுதலாக ஒன்பது மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பு குறிப்பிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளார்.