தருமபுரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 ன் கீழ் வண்ண மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் புறக்கடை / கொல்லைப்புற அலங்கார மீன்வளர்த்தெடுக்கும் திட்டத்தின் கீழ் ஒரு அலகுக்கு ஆகும் செலவின தொகை ரூ.3,00,000 ல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம் ரூ. 20,000 வழங்கப்பட உள்ளது. நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு அலகிற்கு ஆகும் செலவின தொகை ரூ.8,00,000 ல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம் ரூ.3,20,000 மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60% மானியம் ரூ.4,80,000 வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட திட்டங்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெற ஏதுவாக உரிய ஆவணங்களுடன் 30.12.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், இராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, தருமபுரி – 636705. என்ற அலுவலகத்தையும், 04342-296623, 3584824260 என்ற அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்.