fbpx

நடத்தையில் சந்தேகம்.. மனைவி மீது மின்சாரம் பாய்ச்சி கொலை..!! 60 வயது முதியவர் கைது.!

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கணவர் தன் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை மின்சாரம் செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் உனக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் ஹமீது(60) என்ற நபர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஹாத்தூண்(52). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் மீது ஹமீதுக்கு தொடர்ந்து சந்தேகம் இருந்து வந்திருக்கிறது. அவர் வேறொரு நபருடன் தவறான உறவில் இருப்பதாக கூறி அடிக்கடி தகராறு செய்துள்ளார் .

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டிலிருந்த மின்சார வயரை தனது மனைவியின் மீது செலுத்தி மின்சாரம் பாய்ச்சி அவரை கொலை செய்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை தனது தாய் இறந்து கிடப்பதை கண்ட அவரது மகன் முஹம்மது நதீம் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய குற்றவாளி ஹமீதை கைது செய்து விசாரித்ததில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Next Post

"விடியா அரசின் கோமா நிலை.." மக்களுக்காக போராடும் அதிமுக..!! இறங்கி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.!

Sun Feb 11 , 2024
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியிலும் பரபரப்பாக இயங்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மும்முறமாக இயங்கி வருகிறது. தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு போன்ற பணிகளைத் தவிர ஆளும் கட்சியின் குறைகளை மக்களிடம் தெரிவிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார் அதிமுகவின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி.. மாநில அரசியல் நடக்கும் குறைகளை மட்டுமல்லாமல் நகராட்சி […]

You May Like