இந்தியா முழுவதும் உள்ள அரசு வங்கிகளில் காலியாக உள்ள 6000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ப்ரோபேஷனரி அதிகாரி (PO) ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறையை வங்கி பணியாளர்கள் நிறுவனமான IBPS விரைவில் முடிக்கவுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 22, 2022 வரை IBPS – ibps.in இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வங்கி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி: ஆகஸ்ட் 2, 2022
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22, 2022
IBPS PO முன் தேர்வு தேதி: அக்டோபர் 2022
IBPS PO முதன்மைத் தேர்வு தேதி: நவம்பர் 2022
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்..
கல்வித் தகுதி : இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்… விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் நாளில் பட்டதாரி என்பதற்கான செல்லுபடியாகும் மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழை வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிட வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது..?
- IBPS இன் அதிகாரப்பூர்வ வலைதளமான ibps.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்
- முகப்புப் பக்கத்தில், ”Click here to apply Online for Common Recruitment Process for CRP-PO/MTs-XII’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்
- கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்
- விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து எதிர்காலத்திற்கான பிரிண்ட் அவுட் எடுக்கவும்
IBPS முன் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.. இது CBT முறையில் நடத்தப்படும், அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தற்காலிகமாக ஒரு நேர்காணல் நடத்தப்படும்.