மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக பரவி வரும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிரதான் மந்திரி பெரோஜ்காரி பட்டா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக செய்தி ஒன்று வாட்ஸ் ஆப் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் இதுபோன்ற திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என பி.ஐ.பி விளக்கம் அளித்துள்ளது.
தொழில்நுட்பம் நிறைந்த இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்கும் விதமாக பி.ஐ.பி டிசம்பர் 2019 இல் செய்தியை உண்மை சரிபார்ப்பு குழுவைத் தொடங்கியது. அதன் நோக்கம் “பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காணப்பட்டு, அதனுடைய உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும் .