fbpx

“ஒரு பாஸ்டர் செய்யும் காரியமா இது?” ஜெபக்கூட்டத்திற்கு வரும் 13 வயது சிறுமிக்கு, 63 வயது பாஸ்டர் செய்த காரியம்..

குமரி மாவட்டம் தக்கலை அடுத்த கொற்றிக்கோடு உள்ளது. அந்த மலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 13 வயது மகளுடன், அதே பகுதியில் நடந்து வரும் ஜெப கூடத்திற்கு செல்வது வழக்கம். அந்த ஜெபக்கூடத்தை தக்கலை செம்பருத்திவிளையை சேர்ந்த 63 வயதான பாஸ்டர் ஜாண்றோஸ் என்பவர் நடத்தி வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில், 13 வயது சிறுமி பாஸ்டர் ஜாண்றோஸ் வீட்டிற்க்கு சென்று சிறு சிறு பணிவிடைகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், பணிவிடைகள் செய்வதற்காக சென்றிருந்த சிறுமியை, பாஸ்டர் ஜாண்றோஸ் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். சிறுமி கர்ப்பம் அடைந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்டர் குடும்பத்தினர், சிறுமியை கேரள மாநிலம், கொல்லத்துக்கு அழைத்து சென்று கருவை கலைக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், கொல்லம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பாஸ்டர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, கொல்லம் போலீசார் சிறுமியை மீட்டு வழக்கை குமரி மாவட்ட காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக பாஸ்டர் போதகர் ஜாண்றோஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், குற்றத்தை மறைக்க உதவியதாக பஸ்டர் ஜாண்றோஸ் மனைவி 54 வயது பிரபா மற்றும் 28 வயதான மகன் பிரதீப் ஆகியோர் மீது வும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த பாஸ்டர் ஜாண்றோஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை, தனிப்படை போலீசார் கோவை மாவட்டத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

Read more: “சார் என்ன தொடாதீங்க” கெஞ்சிய மாணவிகள்; பள்ளி வளாகத்தில் 59 வயது ஆசிரியர் செய்த காரியம்..

English Summary

63 years old pastor sexually abused 13 years old girl

Next Post

Vastu Tips | கணவன் மனைவி இடையே காதல் நீடிக்க.. படுக்கையறையில் இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்க..!!

Mon Feb 24 , 2025
To create romance in the bedroom, you must follow these Vastu tips..!

You May Like