fbpx

நோன்பு கஞ்சி தயாரிக்க 6,500 மெட்ரிக்‌ டன்‌ அரிசி வழங்க வேண்டும்…! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும்‌ பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால்‌ வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டுகளைப்‌ போலவே, 2023 ஆண்டிலும்‌ ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும்‌ என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள்‌ வந்துள்ளன.

2023-ம் ஆண்டு, ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ்‌ நோன்பு கடைபிடிக்கப்படும்‌ நாட்களுக்கு மட்டும்‌ பச்சரிசி வழங்க முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌.

பள்ளிவாசல்களுக்குத்‌ தேவைப்படும்‌ அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களுக்குத்‌ தக்க அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 6,500 மெட்ரிக்‌ டன்‌ அரிசி மொத்த அனுமதி மூலம்‌ பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்‌. இதனால்‌, அரசுக்கு 25 கோடியே 63 இலட்சத்து 60 ஆயிரம்‌ ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

2023-ல் ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள்.. 2671-ல் இருந்து வந்ததாக கூறும் Time Traveller.. பகீர் கணிப்புகள்..

Sun Mar 12 , 2023
நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ பயணிக்க முடியும் என்ற கோட்பாடு அல்லது கருத்தாக்கமே காலப்பயணம் அதாவது டைம் ட்ராவல் (Time Travel) என்று அழைக்கப்படுகிறது. காலத்தை கடக்க உதவும் மெஷின்களை உருவாக்கி அதிலிருந்து கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டைம் ட்ராவல் மற்றும் டைம் மெஷின் குறித்தும் தற்போது வரை யாரும் ஆதாரத்துடன் நிரூபித்து காட்டவில்லை. இந்நிலையில் டைம் ட்ராவல் […]

You May Like