KIOCL Limited நிறுவனம் சார்பாக, தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற geologist assistant, geologist chemist, junior chemist, environment engineer, ccr operator போன்ற பணிகளுக்கு, 11 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பணிக்கு, விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், BE,BTech, BSc chemistry masters degree, diploma engineering போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் எழுத்து தேர்வு அல்லது இணையதள தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் அதிகபட்ச வயது 40 வரையில் இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு பணியின் அடிப்படையில், 65000 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு விண்ணப்பதாரர்கள் இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, வரும் 14 மற்றும் 15 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணலில் பங்கேற்று கொண்டு, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.