குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, நபர் ஒருவர் இவருடன் சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, சம்பவத்தன்று இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.
அப்போது, இளம்பெண் உடைமாற்றுவதை அந்த நபர் இளம்பென்னிற்கு தெரியாமல் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். பின்னர், அவர் இளம்பெண்ணின் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது நண்பர்கள் அதை மேலும் சிலருக்கு அனுப்பியுள்ளனர். அப்படியே அந்த வீடியோ அவர்களின் நண்பர்களுக்குள் சுற்றியிருக்கிறது.
இதையடுத்து, கடந்த 2023 நவம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி வரை மொத்தம் 7 பேர் இளம்பெண்ணை அணுகியுள்ளனர். அவர்கள், அந்த வீடியோவை இளம்பெண்ணிடம் காண்பித்து `என்னுடன் நீ உல்லாசமாக இருக்கவில்லை என்றால், இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துவிடுவேன்’ என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில், அந்த வீடியோ, இளம்பெண்ணின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இளம்பெண்ணிடம் விசாரித்த போது தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, தன்னை எத்தனை பேர் தான் பலாத்காரம் செய்வார்கள் என்று விரக்தி அடைந்த இளம்பெண், ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணிற்கு ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை குற்றவாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: SpaDex செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விடுவித்து இஸ்ரோ சாதனை.. சந்திரயான் 4-க்கு அடித்தளம்..