மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களை போலவே, ஆண் ஊழியர்களுக்கும் பராமரிப்பு விடுமுறை வழங்குவதற்கான, புதிய விதிமுறை திருத்தங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
நாட்டில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட மாதங்கள் மகப்பேறு விடுமுறை வழங்குவதை போல, குழந்தை பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற முக்கிய பணிகளில் இருந்து, இந்திய அளவில் சேவை வழங்கி வரும் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, அகில இந்திய சேவை விதிகள் திருத்தம் செய்யப்பட்டு, ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அகில இந்திய அளவில் சேவைகளை வழங்கும், பெண் ஊழியர்கள் மற்றும் விதவை, விவாகரத்து பெற்ற ஒற்றை ஆண் ஊழியர்களுக்கும் 730 நாட்கள் வரையில், குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படலாம் என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் சிரேந்திர சிங் தெரிவித்திருக்கிறார். அத்துடன், இந்த குழந்தை வளர்ப்பு விடுமுறை, மத்திய சேவை அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.