மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான சுப்புத்தாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலி வேலை செய்து வரும் மூதாட்டிக்கு, 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இருவரும் தங்களின் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது கடையின் அருகே, அதே பகுதியை சேர்ந்த தங்கப்பன்(30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாலிபர் நின்று கொண்டிருந்துள்ளார். மூதாட்டியை பார்த்த தங்கப்பன், எனது வீட்டில் பிரியாணி வாங்கி வைத்து உள்ளேன், சாப்பிட வருகிறீர்களா? என கேட்டுள்ளார். இந்நிலையில், பிரியாணி மீதுள்ள ஆசையில் மூதாட்டி தங்கப்பனின் வீட்டிற்க்கு சென்றுள்ளார். மூதாட்டி சாப்பிடும் வரை, தங்கப்பன் அங்கேயே இருந்துள்ளார்.
சாப்பிட்டு முடித்த உடன், மூதாட்டி வெளியே செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்த தங்கப்பன், மூதாட்டியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், மூதாட்டி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தனது வீட்டிற்க்கு சென்ற மூதாட்டி, தனது மகன்களுக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியின் மகன்கள், ஊருக்கு வந்து, சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு தங்கப்பனை கைது செய்துள்ளனர். 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.