அரசுப் பள்ளிகளில் இம்மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், 12 வேலை நாட்களில் 81,797 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து, அரசு ஆசிரியர்கள் அனைவரையும் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை சிறப்பு முகாம் அடிப்படையில் கோடை விடுமுறைக்கு முன்பே மேற்கொள்ள, அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புக்களை பிரித்து வழங்கி, சேர்க்கையை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் இம்மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், 12 வேலைநாட்களில் 81,797 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.