fbpx

“வாவ் இதுவல்லவோ பக்தி.”! ஸ்ரீராமருக்காக 30 வருடம் மௌன விரதம்.! 85 வயது மூதாட்டி திறப்பு விழாவிற்கு எடுத்த முடிவு.!

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இந்த திறப்பு விழாவிற்கு இன்னும் 13 நாட்களே இருக்கும் நிலையில் ஸ்ரீராமரின் பக்தர்கள் அனைவரும் இந்த திறப்பு விழாவிற்காக உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கியது. 1,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் இந்த கோவில் வருகின்ற 22 ஆம் தேதி திறக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன் நின்று தலைமை ஏற்று இந்தத் திறப்பு விழாவை சிறப்பாக நடத்த இருக்கிறார்.

இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜார்க்கண்டை சேர்ந்த 85 வயது மூதாட்டி தனது 30 வருட மௌன விரதத்தை முடித்திருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழ்ந்து வரும் சரஸ்வதி தேவி என்ற இந்த மூதாட்டி 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என மௌன விரதம் இருக்க தொடங்கி இருக்கிறார்.

விரதத்தை தொடங்கிய நாளிலிருந்து தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து கோவில் கட்டி முடிக்கும் வரை முழு மௌன விரதம் இருந்துள்ளார். இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருப்பதால் தனது மௌன விரதத்தை முடிப்பதாக அறிவித்திருக்கிறார் அந்த மூதாட்டி.

Next Post

"மழை எதிரொலி"..! பள்ளிகளில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமா.? செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பதில்.!

Tue Jan 9 , 2024
தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார் . தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் புயலால் வெள்ள நீர் […]

You May Like