fbpx

6-ம் கட்ட தேர்தலில் 889 வேட்பாளர்கள் போட்டி…! இந்திய தேர்தல் ஆணையம் தகவல்…!

2024 மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப் பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3ம் கட்ட வாக்குப் பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் 20 வேட்பாளர்களும் இதில் அடங்குவர். இந்த தொகுதிக்கான மனுதாக்கல் ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது.

மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு மொத்தம் 1978 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 6 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2024 மே 06 ஆகும். தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் பரிசீலனை செய்ததில், 900 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என்று கண்டறியப்பட்டது. அதில் மனுக்களை விலக்கிக் கொண்டவர்கள் தவிர இறுதியாக 889 பேர் களத்தில் உள்ளனர்.

ஆறாம் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், தில்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2024 மே 25-ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

Vignesh

Next Post

சற்றுமுன்...! காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குகள் பதிவு...!

Mon May 20 , 2024
ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . ஒடிசா சட்டப்பேரவையின் 35 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. பீகார், ஜம்மு-காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு […]

You May Like