fbpx

8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! இந்து சமய அறநிலையத்துறையில் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் காலியாகவுள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 04.10.2024-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ஓட்டுநர் காலியிடங்களின் எண்ணிக்கை – 4

கல்வித் தகுதி :

* 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் – மாதம் ரூ. 9,250

வயதுத் தகுதி – 01.07.2024 அன்று 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை – நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை – https://www.tiruchengodearthanareeswarar.hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி – உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் – 637211

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.10.2024

மேலும் விவரங்களுக்கு https://www.tiruchengodearthanareeswarar.hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Read More : Flipkart நிறுவனத்தில் வேலை..!! இந்த கல்வித் தகுதி இருந்தாலே போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Namakkal District Tiruchengode Arulmiku Arthanareeswarar Thirukoil has published an employment notification to fill the vacant posts of driver.

Chella

Next Post

கணவன் மனைவி உடனான பாலியல் உறவு கற்பழிப்பு ஆகாது…! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்…

Fri Oct 4 , 2024
'May impact conjugal relationship': Govt against criminalising marital rape

You May Like