fbpx

பொங்கல் லீவ்…! அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை.‌‌..! தமிழக அரசு உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஜனவரி 15, 16, 18, 19 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அதை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 25-ம் தேதி சனிக்கிழமையை பணி நாளாக அறிவித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

English Summary

9 days holiday for government employees & teachers

Vignesh

Next Post

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர்!. 116 வயதான ஜப்பானிய மூதாட்டி காலமானார்!.

Sun Jan 5 , 2025
Guinness World Record Oldest Person! 116-year-old Japanese woman dies!

You May Like