தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாகவுள்ள 957 சாலை ஆய்வாளர் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்.
தமிழ்நாடு சார்ந்த பல்வேறு அரசு பணிகளுக்கு ஆள்சேர்ப்பு தேர்வுகளை நடத்தி வரும் டிஎன்பிஎஸ்சி சாலை ஆய்வாளர் பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், பணியிட விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை பார்க்கலாம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையை சேர்ந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி இன்ஜினியரிங் சப்பார்டினேட் சர்வீஸை சேர்ந்த 957 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் எழுத படிக்க நன்றாக தெரிய வேண்டும். SC, SC(A), ST, MBC/DC, BC(OBCM), BCM ஆகிய பிரிவுகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. இதை தவிர இதர பிரிவினருக்கு 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு OTR(one time registration) பதிவு எண் இருக்க வேண்டும். இல்லாதவர்கள் 150 ருபாய் கட்டி பதிவு செய்து கொள்ளலாம். அதை 5 வருடங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்திற்குள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in செல்லவும்.OTR பதிவு எண் மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி உள்ளே சென்று விண்ணப்பிக்கலாம்.