fbpx

மகிழ்ச்சி செய்தி…! Point to Point… கிளாம்பாக்கம் செல்ல 10 நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து…!

கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு செல்ல 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் 30.12.2023 முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இப்பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் இரயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு, கூடுதலாக மாநகரப் போக்குவரத்துக் கழகமானது தடம் எண்.M18-ல் 6 பேருந்துகளை இடைநிறுத்தமில்லா பேருந்துகளாக (Point to Point) 10 நிமிட இடைவெளியில் 25.01.2024 அன்று முதல் அதிகாலை 03 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இயக்க உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கிளம்பாக்கம்

இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படமாட்டாது எனவும், இ.சி.ஆர். சாலை மார்க்கம் நீங்கலாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

முருகனுக்கு காவடி எடுப்பதன் காரணம் என்ன?... தைப்பூச திருநாளும் அதன் சிறப்புகளும்!

Thu Jan 25 , 2024
தை மாதம் என்பது தெய்வீக மாதமாகும். இந்த தை மாதத்தில்தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும். அன்றைய தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது. இந்த நன்னாளானது முருகனுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புக்கள் மிக்க தைப்பூச நாள் அன்று விரதம் இருந்தால் கேட்ட வரத்தை தந்தருள்வார் […]

You May Like