fbpx

திராட்சை பழத்தில் ஒயின் தயாரித்த 12 வயது சிறுவன்! : அதை குடித்த நண்பன் மயங்கி விழுந்த பரிதாபம்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரயின்கீழூ பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுவன் ஒருவன் அவனது பெற்றோர் சாப்பிடுவதற்காக வாங்கி வந்த  திராட்சை பழத்தை வைத்து ஒயின் தயாரிக்க முடிவு செய்தான். அதற்காக யூ-டியூப் பார்த்து திராட்சை பழ சாறு மூலம் ஒயின் தயாரிக்க முயற்சித்துள்ளான். யூ-டியூபில் சொன்னது போல் திராட்சை பழ சாறை சேகரித்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து அந்த பாட்டிலை கடந்த சில நாட்களாக அவனது வீட்டிற்கு அருகே மண்ணுக்குள் புதைத்து வைத்தான்.

பின்னர், திராட்சை பழச்சாறு ஒயினாக மாறி இருக்கும் என நினைத்து மண்ணில் புதைத்து வைத்த அந்த பாட்டு இல்லை கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியில் எடுத்துள்ளான். பிறகு அந்த பாட்டிலை அவன் படிக்கும் பள்ளிக்கு எடுத்துச் சென்றுள்ளான் அது மட்டுமல்லாமல் அவன் தயாரித்த அந்த வகையினை அவன் நண்பனுக்கு கொடுத்துள்ளான்.

அதை குடித்த அவனுடைய நண்பனுக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவனை அவனது ஆசிரியர்கள், அருகில் உள்ள ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளனர். ஹாஸ்பிடலில் சேர்த்த அந்த மாணவனின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனிடம் காவல்துறையினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போது அவனது நண்பன் அவனுக்கு தானே தயரித்த ஒயினை கொடுத்ததாகவும், அந்த ஒயினை குடித்ததால் தான் வாந்தி மயக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், ஒயின் தயாரித்த சிறுவனிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில், யூ-டியூப் பார்த்து ஒயின் தயாரித்ததை அந்த சிறுவன் ஒத்துக்கொண்டான். ஆனால், தான் தயாரித்த ஒயினில் ஆல்கஹால் கலக்கவில்லை என தெரிவித்தான். என் மகன் திராட்சை பழத்தை வைத்து எதோ செய்து வருகின்றான் என்று நினைத்தேன்,  ஆனால் அது ஒயின் என்று எனக்கு‌ தெரியாது. என அந்த சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுவன் தயாரித்த திராட்சை ரச ஒயினை எடுத்துச் சென்ற காவல்துறையினர், அதை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த ஒயினில் ஆல்கஹால் கலந்திருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம் என சிறுவனையும், அவனது பெற்றோரையும் எச்சரித்து அனுப்பினர்.

Baskar

Next Post

பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்! : அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

Sun Jul 31 , 2022
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள ஆணைகுப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புக்கு கணக்கு ஆசிரியராக பணிபுரியும் கார்த்தியசாமி தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக எட்டுக்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த வாரம் தலைமை ஆசிரியர் குலசேகரனிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன், மாவட்ட கல்வி […]

You May Like