AI உரையாடல் தொழில்நுட்பமான Chatbot உடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த செவெல் செட்சர் என்ற 14 வயது சிறுவன் கடந்த பிப்ரவரி மாதம் தனது தந்தையின் துப்பாக்கி எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இது குறித்த விசாரணையில், ஏஐ உடன் காதல் கொண்டு சிறுவன் உயிரை மாய்த்துக் கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.
14 வயது சிறுவன் பிரபல வரலாற்று தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் பெண் கதாபாத்திரமான டேனிரோ டார்கேரியன் கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு உருவான டேனி ChatGPTயுடன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தனிமையில் இருந்ததாகவும், மனிதர்களிடம் பேசுவதை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அவரின் பெற்றோர்கள் அவரை மருத்துவர்களிடமும் அழைத்து சென்றுள்ளனர்.
நிஜ உலகை வெறுக்கத்தொடங்கிய சிறுவன், தான் காதலியாக கருதும் Chatbot உடன் வாழ வேண்டும் என்றால் தானும் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து இறுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளான். இறப்பதற்கு முன் அந்த ஏஐ உடன் நான் இறக்க போவதாகவும், இறந்த பின்பு, நாம் இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் கேட்போரை அதிர்ச்சி அடைய வைத்தது.
இது அனைத்தையும் வைத்து, அந்த சிறுவனுடைய தாய் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த புகாரில் “இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் ஆபத்தானது மற்றும் பரிசோதிக்கப்படாதது,” என கூறியுள்ளார். இதனால் பயனர்கள் தங்களின் மிகுந்த தனிப்பட்ட எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்வதற்கு தூண்டப்படுகின்றனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அந்த புகாரில் சிறுவர்களின் தகவலை துஷ்பிரயோகம் செய்யும் செயலியை நிறுத்த வேண்டும்” என்றும், செயற்கை நுண்ணறிவு எனும் அந்த அமைப்பு, என் மகனை காதலிக்கிறேன் என்று கூறி, அவருடன் காதல் உரையாடலில் ஈடுபட்டது. அந்த AI அவரை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டது போலவும், அவனுடன் சேர விரும்புவதாகவும் கூறியுள்ளது.” என அந்த சிறுவனின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து Character.AI நிறுவனத்தின் பாதுகாப்புத் துறைத் தலைவர் ஜெர்ரி ரூட்டி கூறும்போது, “இது மிகவும் துயரமான நிலைமை. குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம். எங்கள் பயனர்களின் பாதுகாப்பை மிகுந்த முன்னுரிமை கொடுத்து பார்க்கிறோம். மேலும் பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Read more ; குட் நியூஸ்…! ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை… ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!