62 வயது பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 32 வயது இளைஞர் பலமுறை உல்லாசம் அனுபவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். அப்போது, ஆக்ராவில் 32 வயதான ககன்தீப் என்பவர் வைத்திருந்த ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும், ககன்தீப்புக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். பின்னர் அவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இதையடுத்து, அந்த அமெரிக்க பெண் அவ்வப்போது இந்தியா வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்தியா வரும் அப்பெண்ணை, திருமணம் செய்வதாக கூறி ககன்தீப் அவருடன் பாலியல் ரீதியாக பலமுறை உறவு வைத்துள்ளார்.
மேலும் டெல்லி, அமிர்தசரஸ் போன்ற இடத்திற்கு எல்லாம் அழைத்துச் சென்று சுற்றியுள்ளார். இவையெல்லாம் ககன்தீப்பின் குடும்பத்தினருக்கும் தெரிந்தே நடந்ததாக கூறப்படுகிறது. தன்னிடம் பாலியல் ரீதியாக உறவு மட்டுமே வைத்துக்கொண்டு திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததால், ககன்தீப் மீது அமெரிக்க பெண்ணுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து, கடந்த மே 4ஆம் தேதி டெல்லியில் இருக்கும் விவேக் விஹார் காவல் நிலையத்தில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ககன்தீப் மீது அப்பெண் புகார் அளித்துள்ளார். பின்னர், ககன்தீப் மீது ஐ.பி.சி 376, 328 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமெரிக்க பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் ககன்தீப்பை கடந்த மே 6ஆம் தேதி ஆக்ராவில் கைது செய்தனர் .