உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் 2 கிலோ எடையுடன் கூடிய 6 மாத கரு வளர்ந்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மருத்துவமனை மருத்துவர்கள் அரிய அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். 7 மாத ஆண் குழந்தையின் வயிறு பெரிதாக வளர்ந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், குழந்தையின் வயிற்றில் 2 கிலோ எடையுள்ள 6 மாத கரு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கருவை அகற்றி 7 மாத ஆண் குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.