எரியும் அடுப்பின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் ஒரு சாமியாரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி இருக்கிறது. விறகு மூட்டப்பட்டு தனலாய் கொதிக்கும் அடுப்பின் மீது ஒரு பலகையில் அமர்ந்திருக்கும் சாமியார் தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு பீடி புகைத்தவாறு ஆசிர்வாதத்தை வழங்குகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரண்டாகி இருக்கிறது சில பக்தர்கள் அவருக்கு விறகு மூட்டி அதில் நெருப்பு பற்றவைத்தும் அவரிடமிருந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். யார் இந்த சாமியார் எதற்காக இவர் இவ்வாறு செய்கிறார் என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளவாசிகளின் மனதில் எழுதித்திருக்கின்றது.
ஹிந்தி செய்தி தொலைக்காட்சியான ஆஜ் தக் தகவல்களின்படி இந்த பாபா மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் மர்த்தி என்ற இடத்தில் வசித்து வருகிறார். பசு பாதுகாப்பு ஆசிரமம் நடத்தி வரும் இவரது பெயர் குருதாஸ் மகராஜ் என்பதாகும். அந்த தொலைக்காட்சிக்கு இவரளித்த பேட்டியில் நான் ஒரு சாமியார் அல்ல என்றும் எந்த மூடநம்பிக்கையின் அடிப்படையிலும் அடுப்பின் மீது அமர்ந்து ஆசீர்வாதம் வழங்கவில்லை என தெரிவித்திருக்கிறார். கடவுளின் அருளால் தனக்கு சக்தி கிடைப்பதால் இவ்வாறு சுடுகின்ற அடுப்பின் மீது அமர்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் குருதாஸ். மேலும் இவர் மகாராஜ் என்ற பெயரால் அழைக்கப்படுவதையும் விரும்பவில்லை எனவும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.