fbpx

’மோடியின் கைகளில் பிச்சை பாத்திரம்’..!! புது சர்ச்சையை கிளப்பிய ஆ.ராசா..!!

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி முழு மெஜாரிட்டி பெறாதது குறித்து ”கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்” என்ற தலைப்பில நீலகிரி திமுக எம்பி ஆ.ராசா ட்விட்டரில் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு முழு மெஜாரிட்டி பெற்றது. 2019ஆம் ஆண்டு அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்தது. ஆனால், 2024 தேர்தலில் முழு மெஜாரிட்டி பெறவில்லை. கூட்டணி கட்சிகளின் தயவை நம்பியே ஆட்சியமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ராமர் கோயில் எழுப்பிய உத்தரப்பிரதேசத்திலேயே பாஜக எதிர்பாராதவிதமாக பெரும் பின்னடைவை சந்தித்தது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பாஜக 240 தொகுதிகளில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஜக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், சிவசேனா ஷிண்டே பிரிவு 7 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ஐந்து இடங்களிலும் வென்றுள்ளன. இதுதவிர பாஜக கூட்டணியில் உள்ள பல்வேறு சிறிய கட்சிகள் ஒன்று முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 290-க்கும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணி வென்றுள்ளதால் மெஜாரிட்டியை பொறுத்தவரை பிரச்சனை இல்லை.

அதேநேரம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரில் நிதிஷ்குமாரின் ஜக்கிய ஜனதா தளம் மற்றும் சில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் 5 ஆண்டுகள் பிரதமர் மோடியால் ஆட்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைனாரிட்டி ஆட்சியாகவே அடுத்த 5 ஆண்டுகள் தொடரப்போவது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் கடவுளின் குழந்தை மோடி என்று கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி முழு மெஜாரிட்டி பெறாதது குறித்து ”கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்” என்ற தலைப்பில நீலகிரி திமுக எம்பி ஆ ராசா போட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ட்வீட்டில்,

“கடவுள் குழந்தையின்

கைகளில் பிச்சை பாத்திரம் !

அட்சயப்பாத்திரத்தோடு

ஆந்திராவும் பீகாரும் ;

கடவுளை மற

மனிதனை நினை !

பெரியார் வாழ்கிறார் !!” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி..!! தமிழக பாஜக தலைவராகிறார் வானதி சீனிவாசன்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

English Summary

Nilgiris DMK MP A. Raza posted on Twitter with the caption “A begging vessel in the hands of a child of God” about Prime Minister Modi not getting full majority in the Lok Sabha elections.

Chella

Next Post

கர்ப்பகாலத்தில் வயிற்றில் ஏற்படும் அரிப்புக்கு சிறந்த தீர்வு!!

Thu Jun 6 , 2024
Best Remedy for Itchy Stomach During Pregnancy

You May Like