fbpx

துணிவு படத்தில் அஜித் குமாரின் கதாபாத்திரம் பெயர் என்ன? டிவிஸ்ட் வைத்த படக்குழு!…

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின், டிரெய்லர் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் கதாபாத்திரங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கல் வெளியீடுக்கு தயாராகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார் துணிவு திரைப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளிவந்து, மூன்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், துணிவு திரைப்படத்தில் உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் மைப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டாவது அறிமுகமான பக்ஸ், ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரேம் அதே பெயர் கொண்ட கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். ஜான் கொக்கன் கிரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி தயாளன் கதாபாத்திரத்திலும், நடிகர் அஜய் ராம் சரண் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

ஆனால் அஜித் குமாரின் கதாபாத்திரத்தின் பெயரை மட்டும் கேள்விக்குறியுடன் டிவிட்டரில் ரிவீல் செய்துள்ள படக்குழு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. துணிவு படத்தின் ட்விட்டரில் தொடர்ந்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருப்பதால் பொங்கல் ரிலீஸ் துணிவு படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Kokila

Next Post

"ஆண்டிஸ் நம்பர் எக்ஸ்சேஞ்" முகநூல் பக்கம்.. பெண்களை குறிவைத்த நபர்..! வெளிவரும் தகவல்கள்..

Fri Dec 30 , 2022
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 48வயது பெண் ஒருவர் வயதான முதியவரை பராமரிக்கும் வேலை பார்த்து வருகிறார்.  இவரது செல்போன் “வாட்ஸ் ஆப்” எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு “ஆபாசமாக படங்களை போட்டு அதில் செல்போன் எண்ணையும் பதிவிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” என்று கூறி மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், குறுஞ்செய்தி வந்த […]

You May Like