fbpx

நாக்கை அறுத்த சிறுவன் பழி தீர்க்க படையுடன் சென்று செய்த கொடூரம்.!

உத்தரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தரமௌலி என்ற சந்துரு எஸ்(38). இவருடைய தந்தை சோம்பங்கையா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகனை லோகேஷ் மணி, விஜயா, மாருதி மற்றும் ஆனந்த் ஆகிய 5 இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கொலை செய்து கொன்று விட்டாதாக புகாரில் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து புகாரில் அவர் கூறியதாவது , ” ஒரு வருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் ஏற்பட்ட சின்ன ஒரு சண்டையில் சந்துரு, மணியின் நாக்கை கோபத்தில் வெட்டி விட்டான். அதனை மனதில் வைத்து கொண்டு சிறுவன் மணி தனது நண்பர்களான மகேஷ், அஞ்சனி ஜி, மற்றும் தீபு என்கிற தீபக் ஆகிய சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு சந்துருவை பழிதீர்க்கும் விதமாக சமீபத்தில் தாக்கிவிட்டான்.

மேலும் என்னுடைய மகன் வேலை எதுவும் செய்யவில்லை, திருமணமும் ஆகவில்லை.
மணியின் நாக்கை வெட்டியதற்காக சந்துரு காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் தான் சந்துருவுக்கு ஜாமீன் கிடைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், மணி மற்றும் அவருடைய கூட்டாளிகள் சந்துருவை தேடி வந்து கலவரத்தில் ஈடுபட்டு அங்கிருந்த ஒரு கல்லால் தலையில் தாக்கி , தலையை பிடித்து சுவரில் இடித்து கொலை செய்தனர்
” என்று புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் ககாலிபுரா காவல்நிலையத்தில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும் மணியிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு சந்துரு, மணியின் ஆட்டோ ரிக்‌ஷாவை வாடகைக்கு வாங்கிச் சென்றுள்ளான்.

அதனால் அவர் இருவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்படவே மணியை மொட்டைமாடிக்கு வரவைத்த சந்துரு, அவரது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி, மணியின் நாக்கை வெட்டியுள்ளான். அதேபோல தானும் பழிவாங்க நினைத்தேன் அதனால் தான் சந்துருவை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் மணி. இந்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

’யாரும் இதை செய்யக்கூடாது’..!! ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நடிகர் விஜய்..!!

Tue Nov 8 , 2022
ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும், யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, […]

You May Like