சத்தியமங்கல பகுதியில் உள்ள மேட்டூரில் ராஜசேகர் மற்றும் அவரது மகன் பாரதி, 19 வசித்து வந்துள்ளார். மகன் தனியார் கல்லுாரியில் பி.பி.எம்., முன்றாமாண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறை நாளில் உறவினர் பரணியுடன் தனது, வீட்டு பின்பக்கமாக இருந்த தோட்டத்து கிணற்றில் பாரதி குளிக்க சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாத பாரதி சட்டென்று நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு பரணி கத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். நீச்சல் தெரிந்த சிலர் குதித்து தேடினர்.
இந்த நிலையில், பாரதி கிடைக்காததால் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் சென்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தேடியுள்ளார். ஆழமான பகுதியில் சிக்கியிருந்த பாரதியின் இறந்த உடலை மீட்டனர். காவல்துறையினர் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமணைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.