Brazil: பிரேசிலின் மினாஸ் ஜெராஸ் நகரில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் பலியாகினர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.
பிரேசிலின் சாவோ பாலோவில் இருந்து நேற்று 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, தென்கிழக்கு பகுதியில் உள்ள மினாஸ் ஜெரெய்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் செல்லும்போது, பேருந்தின் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 37 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பேருந்து மற்றும் லாரி மோதியது தவிர, மூன்று பயணிகளுடன் ஒரு காரும் விபத்தில் சிக்கியது, இருப்பினும், காரில் இருந்த மூன்று பயணிகளும் அதிசயமாக உயிர் தப்பினர். போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 10,000 க்கும் அதிகமானோர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர். இந்த ஆண்டு பல ஆபத்தான விபத்துக்களைக் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Readmore: “வடிவேலு கூட மட்டும் நடிக்க மாட்டேன்” நடிகர் அஜித்குமார் எடுத்த முடிவு.. காரணம் இது தான்..