fbpx

“கொடுக்கிற பில்டப்பை பார்த்தா நிஜமாவே குத்திடுவானோ…….” பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய ஓட்டுநர்!

கோவையில் கார் ஓட்டி வந்த பெண்ணிடம் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கு அடுத்த பெரிய நகரமான கோயம்புத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனை சரி செய்வதற்காக தற்போது புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் கார் ஓட்டி வந்ததில் ஏற்பட்ட தகராறில் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கோயம்புத்தூர் திருச்சி சாலை மேம்பாலத்தில் பின் ஒருவர் ஓட்டி வந்த கார் ஒரு வாடகை காரின் மீது இடித்து விட்டது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாடகை கார் ஓட்டுநர் கத்தியை எடுத்து குத்துவது போல் அந்தப் பெண்ணை மிரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rupa

Next Post

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள்..!! காவல் துறையினருக்கு அதிரடி உத்தரவு போட்ட டிஜிபி..!!

Thu Mar 9 , 2023
வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் பற்றி ஆய்வுக் கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர், பாலினம், வயது மற்றும் சொந்த ஊர் பற்றிய விவரங்களை காவல்துறை சேகரிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதோடு தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி […]

You May Like