fbpx

ஒரு காரின் நம்பர் பிளேட் ரூ.122 கோடிக்கு ஏலம்!… கின்னஸ் சாதனை படைத்தது!… அதில் என்ன ஸ்பெஷல்?

துபாயில் கார்களுக்கான நம்பர் பிளேட் ஏலம் நடத்தப்பட்டதில், P7 என்ற பதிவெண் கொண்ட காரின் நம்பர் பிளேட் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போய், உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட நம்பர் பிளேட் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

இஸ்லாமியர்கள் இன்னும் சிறிது நாட்களில் ரமலான் பண்டிகையை கொண்டாட உள்ளனர். அதற்காக ஒரு மாத காலம் இஃப்தார் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். இதனையொட்டி, உலக பட்டினியைப் போக்க முடிவு செய்த அந்நாட்டு ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம், அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தார்.இந்தத் திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று, அந்நாட்டில் உள்ள கார்களுக்கு பேன்சியான நம்பர் பிளேட்கள் மற்றும் செல்போன் எண்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நம்பர் பிளேட்களை ஏலம் விடும் பொறுப்பு எமிரேட்ஸ் ஆக்ஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் நிறைய நம்பர் பிளேட்கள் இடம் பெற்றன. 10 இரட்டை இலக்க நம்பர்களான AA19, AA22, AA80, O71, X36, W78, H31, Z37, J57 மற்றும் N41 ஆகிய நம்பர் பிளேட்டும், மற்ற ஸ்பெஷல் நம்பர் பிளேட்களான Y900, Q22222 ஆகிய நம்பர்களும் ஏலத்திற்கு வந்தன. இவை அனைத்தும் ஏலம் போன நிலையில், P7 என்ற பதிவெண் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 2008-ம் ஆண்டு அபுதாபியில் நடத்தப்பட்ட ஏலத்தில், ஒன்றாம் எண் கொண்ட நம்பர் 52.2 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ116.3 கோடி என்ற விலையில் ஏலம் போனதில், உலகிலேயே இதுவரை அதிகபட்ச விலையில் ஏலம் போன நம்பர் பிளேட் என்ற சாதனையை படைத்திருந்தது.

ஆனால் தற்போது P7 என்ற பதிவெண் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் அந்த சாதனையை முறியடித்துள்ளது. ஏலத்தின் ஆரம்பத்தில் 33 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நம்பர் பிளேட் இறுதியாக 122 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு வாங்கப்பட்டிருந்தாலும், இதனை வாங்கியது யார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான ஏல வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.அதேபோல் செல்போன் எண் ஒன்றும் நான்கரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 220 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏலம் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் முழுவதும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளரின் 100 கோடி ரூபாய் உணவு நன்கொடை திட்டத்திற்காக வழங்கப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ராணிப்பேட்டை மக்களுக்கு ஓர் அரியவாய்ப்பு!... 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!... வேலைவாய்ப்புக்கான முழுவிவரம் இதோ!

Wed Apr 12 , 2023
இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் பணிக்காக இன சுழற்சி அடிப்படையில் 160 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பருவகால காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால பட்டியல் எழுத்தர் […]

You May Like