பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் இன்று ஆஜரானார் நடிகர் எஸ்.வி.சேகர்.
பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018 ம் ஆண்டு, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக விமர்சித்து முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலைத் தெரிவித்தும், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக, எஸ்.வி.சேகருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.
நிலுவையில் உள்ள இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் நடிகர் எஸ்.வி.சேகர். அடுத்த மாதம் 12ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு.