fbpx

காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவி..!! தேடிச் சென்ற சித்தப்பாவை வெட்டி சாய்த்த கொடூரம்..!! கோவையில் அதிர்ச்சி..!!

கல்லூரி மாணவியை காணவில்லை என காதலனிடம் விசாரிக்கச் சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு மாணவியின் சித்தப்பா கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மிதுன் (20). இவர், டிப்ளமோ படிக்கும்போது அதே கல்லூரியில் படித்து வந்த சாய்பாபா காலனியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது 19 வயதான மகள் ஹர்சினி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருமே கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததால், கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று காலை மிதுன் ஹர்சினியை அழைத்து வந்து விட்டதாக தெரிகிறது. வீட்டில் ஹர்சினி இல்லாததை அறிந்த ஹர்சினியின் சித்தப்பா மணிகண்டன், மிதுனின் செல்போனுக்கு அழைத்து இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது, தான் கணுவாயில் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, மணிகண்டன் ஹர்சினியின் அண்ணன் ஆதித்யா மற்றும் ரெட் டேக்சியில் டிரைவாக வேலை செய்து வரும் காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் செல்வகணபதி என்பருடன் கால் டேக்சியை எடுத்துக் கொண்டு தேடிச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை காணாததால் மீண்டும் அழைத்த போது வெவ்வேறு இடங்களைச் சொல்லியுள்ளார். ஒரு கட்டத்தில் சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர் சாலையில் செல்லும் போது அங்கிருந்த பேக்கரி எதிரே சாலை ஓரமாக மிதுன், அவரது நண்பர் பிரகாஷ் மற்றும் ஆட்டோ டிரைவர் முத்து ஆகிய 3 பேரும் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து மணிகண்டன் எனது அண்ணன் மகள் ஹர்ஷினி எங்கே உள்ளார் என கேட்டு அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

அப்போது மிதுன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டன் இடது மார்பு மற்றும் இடது கை தோல்பட்டையில் குத்தி உள்ளார். தடுக்க சென்ற டாக்ஸி டிரைவர் செல்வகணபதியின் வயிற்று பகுதியில் குத்திவிட்டு மூவரும் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளனர். இதையடுத்து, காயமடைந்த செல்வகணபதி போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் அங்கு இருந்தவர்கள் மணிகண்டனை கோவை கங்கா மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த ரெட் டாக்ஸி டிரைவரான செல்வகணபதி கோவை சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய குற்றவாளிகள் மூவரையும் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : எம்பியை கட்டி அணைத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி..!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!!

English Summary

The student’s stepfather was killed after an argument broke out when he went to inquire about the disappearance of a college student from his boyfriend.

Chella

Next Post

தென் கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!! - 20 பேர் பலி

Mon Jun 24 , 2024
Local fire official Kim Jin-young told a televised briefing said most of the missing people were foreign nationals including Chinese. He said the mobile phone signals of the missing people were tracked to be coming from the second floor of the factory.

You May Like