fbpx

புயல் அலர்ட்… வடமேற்கு வங்கக்கடலில் 180 கி.மீ. தொலைவில் காத்திருக்கும் ஆபத்து… மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…!

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கோபால்பூரில் (ஒடிசா) இருந்து தெற்கு- தென்மேற்கு திசையில் 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். செப். 3 முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

A deep depression over the northwest Bay of Bengal strengthened into a depression.

Vignesh

Next Post

அடுத்த சிக்கல்...! செந்தில் பாலாஜிக்கு செக்... ஊழல் வழக்கில் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி...!

Sun Sep 1 , 2024
Governor allowed to prosecute Senthilbalaji

You May Like