Depression Moving: கடந்த 6 மணிநேரமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கு சுமார் 440 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 530 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டி புதுவை – நெல்லூர் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தரை காற்றின் வேகம் மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
Readmore: மதியம் சாப்பிட்டவுடன் செம தூக்கம் வருதா..? அப்படி தூங்குவது நல்லதா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!