fbpx

தமிழகம் முழுவதும் 22, 24 ஆகிய தேதிகளில்…! ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! முழு விவரம்…

தமிழகம் முழுவதும் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ‌.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா மற்றும் துறைசார்ந்த இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர்.

முதல்நாளில் தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறும். 2-வது நாளில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், நூலகர்கள் மற்றும் இதர துறைசார் அலுவலர்கள், பணியாளர்களுக்கான கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சங்கத்தில் இருந்து 3 பேரும், பதிவுசெய்த சங்கங்களில் இருந்து 2 பேரும் பங்கேற்கலாம்.

Vignesh

Next Post

சற்றுமுன்.‌‌.! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது...!

Wed Jun 21 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது. செந்தில் பாலாஜி இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் குழு மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் உள்ள ஸ்கை வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்பு அளிக்கப்படும் அனஸ்தீசியா எனப்படும் […]

You May Like