11 வருடத்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ். இதனையடுத்து உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் காணடவில் நடைபெற்று வந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வின்றுள்ளார். உலகில் இருக்கக்கூடிய முன்னணி 7 கிராண்ட் மாஸ்டர்கள் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்றனர். இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்று வெற்றிபெறுபவர் தான், தற்போது உலக சாம்பியனாக இருக்கக்கூடியவரிடம், செஸ் உலக சமப்பின் பட்டத்திற்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும்.
அதன்படி நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் முதல் முறை பங்கேற்ற இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார். இதன் காரணாமாக செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். 5 முறை உலக சாம்பிணக் இருந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு (2013க்கு பிறகு ) எந்த ஒரு இந்திய வீரரும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் வரை சென்று வெற்றி பெற்றதில்லை.
ஆனால் தற்போது 11 வருடத்திற்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த 17 வயதான இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.