கர்நாடக மாநில பகுதியில் யஷ்வந்தபுரத்தில் வெங்கடரமணா என்பவர் அக்குபங்சர் டாக்டராக இருந்து வருகிறார். தன்னிடம் நோய் என்று வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது வீட்டுக்கு அருகே சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதை க்ளினிக் போல் நடத்தி வருகிறார்.
கிளினிக் வரும் பெண்களிடன் அக்குபங்சர் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி அவர்களிடம் அத்துமீறியுள்ளார். பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்காக அவர்களது ஆடைகளை கழற்றிவிட்டு, அந்தரங்க உறுப்புகளை தொட்டு அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பெண்கள் ஆடைகளை கழட்டி சிகிச்சை பெறும்போது, அரைகுறை நிலையில் இருக்கும்போதே வீடியோவாக எடுத்து வந்துள்ளார். இதனை பற்றி அங்கே சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு தெரியவரவே பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் மகளிர் காவல் நிலையம், சைபர் கிரைம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து நடந்த விசாரணையில் வெங்கடரமணாவின் செல்போனை கைப்பற்றிய மத்திய காவல்துறை சோதனை நடத்தியதில், 36 ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர்.