fbpx

கவனம்…! பொறியியல் பணிக்கான தேர்வு முடிவுகள்…! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு…!

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலி பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவுரை வழங்கி உள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 02.07.2022 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள்‌ குறித்த போலியான பட்டியல்‌ சமூக வலைதளங்களில்‌ பரவி வருவதாக தெரிய வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள்‌ கருத்தில்‌ கொள்ள வேண்டாம்‌ என தேர்வாணையம்‌ கேட்டுக்கொள்கிறது.

தேர்வாணையத்தின்‌ அனைத்து தேர்வு முடிவுகளும்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ மட்டுமே வெளியிடப்படும்‌. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தின்‌மூலம்‌ அறிந்து கொள்ளுமாறும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது. ‘இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புபவர்களின்‌ மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

தேர்வாணையத்தின்‌ தெரிவுகள்‌ அனைத்தும்‌ விண்ணப்பதாரர்களின்‌ தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைக்‌ கூறி, சட்டத்திற்கு புறம்பாக வேலை வாங்கித்தருவதாகக்‌ கூறும்‌ இடைத்தரகர்களிடம்‌ விண்ணப்பத்தாரர்கள்‌ மிகவும்‌ கவனமாகஇருக்குமாறு தேர்வாணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Vignesh

Next Post

சூப்பர்...! மாணவர்கள் ரூ.2 லட்சம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்...! வெளியான அறிவிப்பு...

Fri Nov 25 , 2022
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்‌, என்ஜடி மற்றும்‌ மத்திய பல்கலைக்கழகங்களில்‌ பட்டப்படிப்பு மற்றும்‌ பட்டமேற்படிப்பு பயிலும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ இன மாணவ, மாணவிகளின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல்‌ உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம்‌ […]

You May Like