Actor Posani Krishna Murali : மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பிரபல நடிகர் போசானி கிருஷ்ண முரளி நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து போலீஸார் கைது செய்தனர்.
2024 தேர்தலுக்கு முன்பு YSRCP-ஐ ஆதரித்த பிரபல நடிகர் போசானி கிருஷ்ண முரளி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். இது தொடர்பாக அவர் மீது ஏற்கன்வே, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், NDA ஆட்சிக்கு வந்த பிறகு, கிருஷ்ண முரளி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார்.
இதையடுத்து, NDA தலைவர்கள் மாநிலம் முழுவதும் கிருஷ்ணமூரளிக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்தனர். அண்ணாமையா மாவட்டத்தில் உள்ள ஓபுலவரிபள்ளி போலீஸ் ஸ்டேஷனில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவில், போலீசார் கிருஷ்ணமூரளியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நடிகர் ராஜம்பேட்டைக்கு மாற்றப்பட்டிருந்தார். நடிகரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் மீது BNS சட்டத்தின் பிரிவு 196, 353 (2) மற்றும் 111 உடன் 3 (5) உடன் படிக்கப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவை கைது செய்யக்கூடியவை மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாதவை என்று போலீசார் தெரிவித்தனர். முரளி கிருஷ்ணாவின் கைதுக்கு YSRCP கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. NDA அரசாங்கம் அதன் தோல்விகளுக்கான விமர்சனங்களை ஜீரணிக்க முடியாமல் கைதுகளை மேற்கொண்டு வருவதாக YSRCP பொதுச் செயலாளர் காடிகோட்டா ஸ்ரீகாந்த் ரெட்டி கூறினார்.
Readmore: நாளை கடைசி நாள்…! பட்டா வாங்காத நபர்களுக்கு சிறப்பு முகாம்… தமிழக அரசு சூப்பர் வாய்ப்பு…!