fbpx

தன்னை விட 9 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்கிறார் பிரபல நடிகரின் மகன்..!! யார் தெரியுமா..?

நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். அதற்கு பிறகு சோபிதாவை திருமணம் செய்யப்போவதாக நாக சைதன்யா அறிவித்துள்ளார். இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாகர்ஜுனாவின் குடும்பத்தில் அடுத்த திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, நாகர்ஜுனாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி. அவரை விவாகரத்து செய்த பிறகு நடிகை அமலாவை 2-வது திருமணம் செய்து கொண்டார் நாகர்ஜுனா. இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், அதில் லட்சுமிக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. அதேபோல், இரண்டாவது மனைவி அமலாவுக்கு பிறந்தவர் தான் அகில். இந்நிலையில் தான், நாகர்ஜூனா தன்னுடைய 2-வது மகன் மகன் அகில் திருமணம் குறித்து அறிவித்துள்ளார்.

அகில் ஜைனப் ரவ்ஜீ என்பவரை காதலிப்பதாகவும், இருவரும் அடுத்தாண்டு திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அகிலுக்கு தற்போது 30 வயது ஆகும் நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. அகிலை விட அவருடைய காதலி ஜைனப் வயதில் மூத்தவர். அகிலுக்கு தற்போது 30 வயதாகும் நிலையில், அவரது காதலிக்கு தற்போது 39 வயது ஆகிறதாம். இவர்களது திருமணம் அடுத்தாண்டு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம்.

Read More : காரைக்கால் – மகாபலிபுரம்..!! கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்..!! தமிழ்நாட்டிற்கு மீண்டும் ரெட் அலர்ட்..!!

English Summary

It has been reported that Akhil is in love with Zainab Rawji and the two are set to get married next year.

Chella

Next Post

வன்முறைக்கு மத்தியில் இம்ரான் கானின் மனைவி கடத்தப்பட்டாரா? பற்றி எரியும் பாகிஸ்தான்..

Thu Nov 28 , 2024
Imran Khan's Wife Bushra Bibi Go Missing Amid Crackdown on Protesters in Pakistan: Report

You May Like