fbpx

“நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…” மகள் கண்முன்னே தந்தைக்கு நேர்ந்த கொடூரம்.!

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமிடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த போர் மிகவும் தீவிரமடைந்தது. பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக பலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த பிணை கைதிகளை ஹமாஸ் இயக்கம் விடுவித்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சில நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாலஸ்தீனியன் மேற்கு கரை பகுதியில் மீண்டும் தாக்குதல் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து பாலஸ்தீனை சேர்ந்த அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்று வருகிறது. இங்குள்ள கில்கியா நகரில் நேற்று நடைபெற்ற சம்பவம் மக்களின் நெஞ்சை பதற வைப்பதாக அமைந்திருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி மக்களை சோகம் அடைய செய்திருக்கிறது.

பாலஸ்தீன போராளி குழுவிற்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் நேற்று நடைபெற்ற சண்டையில் இளம் பெண்ணின் கண் முன்பு அவரது தந்தை துப்பாக்கியால் தலையில் சுட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களின் நெஞ்சை உருகச் செய்திருக்கிறது. மகளின் கண் முன்னே தந்தை சுட்டுக் கொல்லப்பட்டு இறக்கும்போது அந்த மகள் கதறி அழும் காட்சிகள் காண்போர் நெஞ்சையும் கதற செய்துள்ளது.

Next Post

உங்களுக்கு அதிகமான வியர்வை வருகிறதா?… கொசுக்கள் உங்களை விடவே விடாது!… ஏன் தெரியுமா?

Sat Nov 25 , 2023
டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. காரணம் மழைக்காலம் ஆரம்பமாகி விட்டது. இந்த காலத்தில் தான் கொசுக்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படும். மேலும் இந்த டெங்கு கொசுக்கள் எல்லாரையும் கடிக்காது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்.. அதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால், யாருக்கு அதிகமாக உடல் வியர்க்கிறதோ அவர்களை தான் இந்த கொசு கடிக்கிறது. இதுகுறித்து, இத்தொகுப்பில் நாம் விரைவாக தெரிந்துகொள்ளலாம்.. பொதுவாகவே நமக்கு அதிகமாக வியர்க்கும் போது உடலில் […]

You May Like