பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படு்ம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை, கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் மேலாண்மைக்கான வரைவு வழிகாட்டுதல்களை மாநகராட்சி இணையதளத்தில் https://chennaicorporation.gov.in/ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இதன்மீது, சேவை வழங்குபவர்கள், பில்டர்கள், கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் 30 நாட்களுக்குள் swmdebriswaste@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.
இந்த வரைவு வழிகாட்டுதலில், பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படு்ம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரம் கிலோ வரை கட்டிடக் கழிவுகளை சென்னை மாநகராட்சியே இலவசமாக எடுத்துச் செல்லும். ஒரு டன்னுக்கு மேல் 20 டன் வரையிலான கழிவுகளை எடுத்துச் செல்ல ரூ.2,500 வசூலிக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது .