ஆந்திராவில் செயல்பட்டு வரும் துணி பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் துணி பைகள், மருத்துவ உபகரணங்களுக்கு பயன்படுத்தும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியதால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர். 20-க்கும் மேற்பட்ட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் சேதமடைந்தன. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை.